ஹாக்கி இந்தியா சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் நரேந்தர் பத்ரா, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிற்கான தலைவராகவும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். நவீன வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெற்ற தேர்தலில், இந்தியாவை சேர்ந்த நரேந்தர் பத்ரா, அயர்லாந்தை சேர்ந்த பால் பிர்னி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த வின் கென் ரீடும் போட்டியிட்டனர்.
இதில் டேவிட் 29 வாக்குகளும், ரீட் 13 வாக்குகளும், நரேந்தர் பத்ரா 68 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் அதிக வாக்குகள் பெற்ற பத்ரா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆசியாவில் இருந்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை நரேந்தர் பத்ரா பெற்றுள்ளார்.