ஸ்ரேல்

மும்பை தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேலிய சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் (வயது11) ஐ பிரதமர் மோடி சந்த்தித்தார்.  அப்போது அச்சிறுவன் கண்ணீருடன் ”டியர் மோடி ஐ லவ் யூ” எனக்கூறி அவரை அணைத்துக்கொண்டான்.

மும்பையில் 2008ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.  அவர்களில் மோஷேவின் பெற்றோரும் அடங்குவர்.  மும்பை நாரிமன் அவுஸ் தீவிரவாதிகளால் முற்றுகை இடப்பட்ட போது மோஷே தனது பெற்றோர், தாத்தா – பாட்டி, மற்றும் அவரை பார்த்துக்கொள்ளும் ஆயா சாண்ட்ரா ஆகியோருடன் அதே இடத்தில் இருந்தான்.  அப்போது அவனுக்கு வயது 2.   துப்பாக்கி சூட்டில் மோஷேவின் பெற்றோர் இருவரும் மரணமடைந்ததும், சாண்டிரா அனைவரையும் காப்பாற்றி இஸ்ரேலுக்கு அழைத்து வந்தார்.

இங்கு இஸ்ரேலில் தனது தாத்தா வீட்டில் மோஷே வசித்து வருகிறான்.  சாண்ட்ரா ஜெருசலேமில் பணி புரிகிறார்.  இப்போதும் வார இறுதியில் தன் வளர்ப்பு மகன் மோஷேவைக் காண வந்து விடுகிறார்.   மோஷே தற்போது யெஷிவா என அழைக்கப்படும் மதப்பள்ளியில் படித்து வருகிறார்.

இஸ்ரேல் பயணத்தின் போது மோஷேவை சந்தித்து உரையாடினார் மோடி.  மோஷே கண்ணீருடன், டியர் மோட், ஐ லவ் யூ அண்ட் யுவர் பியூப்பிள் இன் இந்தியா, என கூறி கட்டி அணைத்துக் கொண்டான்.   மோடியும் உருக்கம் அடைந்தார்.  மோஷேவும் அவரது குடும்பத்தினரும், சாண்ட்ராவும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா வரலாம் என அழைப்பு விடுத்தார். இஸ்ரேல் பிரதமரும் தான் இந்தியா செல்லவிருப்பதாகவும் அப்போது மோஷே தன்னுடன் வரவேண்டும் எனவும் அழைத்துள்ளார்.

மோடியை யூதச் சிறுவர்களுக்கு அவர்களின் 13 வயதில் நடத்தப்படும் பார் மிட்வா என்னும் சடங்கு மோஷேவுக்கு நடக்கும் போது அழைக்கப் போவதாக மோஷேவின் தாத்தா கூறியுள்ளார்.