மோடி, விளம்பர பிரியர்; நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் இல்லை! கொல்கத்தா கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு

Must read

கொல்கத்தா:

கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, பேசும் பிரதமரை விட நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை, மோடி ஒரு விளம்பர பிரியர் மட்டுமே, நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் இல்லை  என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.

மக்கள் விரோத மோடி அரசுக்கு  எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்,  கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பயிற்சி திடலில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  மோடி ஆட்சியை கடுமையான விமர்சித்தார். நாட்டுக்கு பேசும் பிரதமரை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை என்று கூறினார்.

பிரதமர்  மோடி தலைமையில் பாஜக நல்லாட்சி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிவிட்டதாகவும்,  மோடியின் ஆட்சியில், நாடு முழுவதும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றவர், மோடி அரசில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பெரிய ஊழலை பாஜக செய்துள்ளது என்றும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  பேசினார்.

More articles

Latest article