‘அஞ்சாதே’ படத்தில் கலக்கிய நரேன், மலையாள டைரக்டர் ஜாக் ஹாரிஸ் இயக்கும், தமிழ் படத்தில் நடிப்பது தெரிந்த விஷயம். திரில்லர் கதையான இந்த படத்தில் நரேன் ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார்.
கதிர், ‘பெமினா மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற அனு கீர்த்தி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
சென்னை மற்றும் கொச்சியை களமாக கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மலையாளத்திலும், இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார், டைரக்டர் ஜாக் ஹாரிஸ்.
இரு நாட்களுக்கு முன்னர் இதன் பூஜை நடந்தது. ஒரே நேரத்தில் இரு மொழி ஷுட்டிங்கும் நடக்கும்,
தமிழில் கதிர் நடிக்கும் வேடத்தில் மலையாளத்தில் ஷராஃப் தீன் நடிக்கிறார்.
இரு மொழிப்படங்களிலும் நரேன் – ஆனந்தியே ஜோடியாக நடிக்கிறார்கள்.
இரு மாநிலங்களின் கலாச்சாரத்துக்கு ஏற்ப, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்படும்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]