சென்னை:

பிரபல இலக்கிய பேச்சாளரான இன்னோவா சம்பத் என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.

நாஞ்சில் சம்பத் ஆரம்ப காலத்தில் திமுகவின் பிரசார பீரங்கியதாக திகழ்ந்தவர்.பின்னர் வைகோ மீது உள்ள பாசத்தால்  மதிமுகவுக்கு தாவினர். பின்னர், அங்கிருந்து ஜம்ப் செய்து, அதிமுகவில் இணைந்தார். சம்பத்தின் பேச்சு திறமையை கண்ட  ஜெயலலிதா அவருக்கு  இன்னோவா கார் பரிசு அளித்தார். இதன் காரணமாக  இன்னோவா சம்பத் என்று அழைக்கப்பட்ட நிலையில், ஜெ. மறைவை தொடர்ந்து டிடிவி அணிக்கு தாவினார். அங்கும் ஒத்துவராத நிலையில், அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்து விட்டு இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று வந்தார். ஒருசில படங்களிலும் தலை காட்டினார்.

இந்த நிலையில்,  தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதாக  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளர்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்  ஸ்டாலினை சந்தித்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சம்பத், , ‘’நான் தி.மு.க.வில் இணைவதாக இல்லை. ஆனால் பி.ஜே.பி. எதிரான மனநிலையில் உள்ளேன் என்று கூறினார்.

இந்தத் தேர்தலில் பி.ஜே.பியை எதிர்த்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசார பயணம் இருக்கும் என்றவர், வரும் ஏப்ரல் 16ம் தேதி வரை தமிழகம் முழுக்க பிரசாரம் செய்வேன் என்றார். இப்போதைக்கு நான் ஒரு இன்விசிபிள் பேச்சாளர்’ என்று கூறினார்.