விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவருடைய நடிப்பில் உருவாகும் 28-வது படமாகும்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது .
இந்தப் படத்தின் நாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் ‘ட்ரான்ஸ்’ படத்தில் மட்டுமே நஸ்ரியா நடித்திருந்தார்.
நவம்பர் 21-ம் தேதி இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி படத்தின் டைட்டிலை படக்குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
AnteSundaraniki என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. விவேக் சாகர் இந்த படத்திற்கு இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 2021 இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.