மும்பை:
இன்போசிஸ் நிறுவன பிரச்னை பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிறுவன சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த விஷால் சிகா கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு சந்தையிலும் இன்போசிஸ் நிறுவன பங்குகள் தடுமாற்றத்தை சந்தித்தன.
இந்நிலையில் இன்போசிஸ் தலைவர் சேஷசாயி, துணைத் தலைவர் ரவி வெங்கடேசன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து புதிய தலைவராக துணை நிறுவனர் நந்தன் நீலகேனி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.