1
தேர்தலில் போட்டியிடுபவர்கள், எந்த ஒரு மத வழிபாட்டுத்தலத்துக்குப் போனலும் அங்குள்ள நடைமுறையை பின்பற்றி போஸ் கொடுப்பார்கள். கோயிலுக்கு போனால் திருநீறு, மசூதிக்குப்போனால் குல்லா.. இப்படி.
இதுபோல ஒரு வேட்பாளர் செய்தது, பாவம் சர்ச்சை ஆகிவிட்டது.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் “நாம் தமிழர்” கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் ஹூமாயின் கபீர். கோயிலுக்குச் சென்று வாக்கு கேட்ட இவர், அப்படியே திருநீறு, குங்குமம் எல்லாம் பூசி பக்திமயமாக(!) போஸ்கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார்.
இப்போது சமூகவலைதளங்களில் அதை பதியும் இஸ்லாமிர்கள் சிலர், “நாம் தமிழர் சீமான், ஏற்கெனவே முப்பாட்டன் முருகன், கிருஷ்ணன் என்றெல்லாம் பேசி வருகிறார். இந்த நிலையில் ஆர்.எஸ். எஸ். போல, இஸ்லாமியர்களை “தாய்மதம்” திரும்ப வைக்கிறாரா” என்று எழுதி சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள்.
பாபநாசம் பகுதி மக்களோ, “அட.. இந்த ஹூமாயுன் வாங்கப்போவது எத்தனை பத்து ஓட்டுக்களோ… அவரைவைத்து ஏனய்யா காமெடி செய்கிறீர்கள்” என்று கிண்டலாய் சிரிக்கிறார்கள்.
அதானே… தேர்தல் நேர காமெடிகளை, ஜாலியா எடுத்துக்கணும், சீரியஸ் ஆக்கப்படாது!