சென்னை: தொடர்ச்சியாக பல புயல்கள் உருவாகி, இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களை அலைகழித்துவரும் நிலையில், தற்போது கடந்து சென்றுள்ள புரவி புயலுக்கு அடுத்து, இந்து மகா சமுத்திரப் பகுதியை, குறிப்பாக, தமிழகப் பகுதியை தாக்கப் போவதாக கணிக்கப்படும் புயலுக்கு ‘அர்னாப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கும், வலதுசாரி மீடியா பிரபலம் அர்னாப் கோஸ்வாமிக்கும் தொடர்பில்லை என்பது வேறு விஷயம். இந்தப் பெயரை தேர்வுசெய்தவர்கள் வங்கதேசத்தவர்கள்.

ஈரான், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார் மற்றும் செளதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளிலிருந்து மொத்தம் 169 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்டதுதான் இந்தப் பெயர்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், புயல்களுக்கான புதிய பெயர்களை, தனது பட்டியலிலிருந்து வெளியிட்டுள்ளது. ஃபனி, வாயு, புல்புல் மற்றும் ஹிக்கா போன்றவையே அந்தப் பெயர்கள்.