நாமக்கல்: சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ., பொன்னுசாமி  மாரடைப்பால் காலமானார். அவரது  திடீர் மரணம் திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம்  சேந்தமங்கலம் தொகுதி திமுக  சட்டமன்ற உறுப்பினர் கே. பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான  ஸ்டாலின் உள்ளிட்ட, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மறைவுக்கு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பொன்னுசாமி மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்ற  நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இன்று அதிகாலை வீட்டில் இருக்கும் போது பொன்னுசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு எம்எல்ஏ பொன்னுசாமி உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நான்கு முறை சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி, 2006 மற்றும் 2021 ஆகிய இரண்டு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி, 64 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று, அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் 2011ம் ஆண்டு தேர்தலில் தேமுதி வேட்பாளரிடமும், 2016ம் ஆண்டு அதிமுக வேட்பாளரிடமும் தோல்வியை தழுவினார். இருப்பினும் நான்காவது முறையாக கடந்த 2021ம் ஆண்டு தேர்தலிலும் பொன்னுசாமிக்கு திமுக தலைமை வாய்ப்பு அளித்தது. அப்போது, 90 ஆயிரத்து 681 வாக்குகளை பெற்று, அதிமுக வேட்பாளரை வீழ்த்தி இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட சேந்தமங்கலம் தனித்தொகுதியில் திமுகவின் முகமாக அறியப்பட்ட பொன்னுசாமியின் மறைவு, கட்சிக்கு பெரும் இழப்பு என அக்கட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.