2003ம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நகுல் .

அமுல் பேபி போல் குண்டாக இருந்தவர் தன உடல் எடையை ஹீரோவுக்கு ஏத்தாற்போல் இளைத்து ஐந்து வருடம் கழித்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இவர் நடிகை தேவயாணியின் தம்பி ஆவார். நகிலுக்கும் அவரது கேர்ள் ஃபிரண்ட் ஸ்ருதி பாஸ்கருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. சமீபத்தில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை இணைய தளத்தில் தெரிவித்திருந்தார்.

யுவன், ஹாரிஸ், தமன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களையும் பாடி பின்னணி பாடகராக வலம் வந்தார்.

இந்நிலையில் நேற்று நகுல் – ஸ்ருதி பாஸ்கர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

[youtube-feed feed=1]