காஷ்மீர்,
நக்ரோட்டா பகுதியில் இன்று காலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவிற்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின்போது, எல்லையை ஒட்டி அமைந்துள்ள சம்பா பகுதி வயலில், 20 அடி ஆழத்தில், 80 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை அமைத்து, பாகிஸ்தான் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர்.
ஏற்கனவே உரி எல்லைப்பகுதியில் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்களை கொன்றனர். இதற்கு அதிரடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்று குவித்தது.
இதற்கிடையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் ஜம்மு புறநகர் பகுதியான ‘நக்ரோட்டா’வில் உள்ள ராணுவத்தின் 16–வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
அதிகாலை 5.30 மணி அளவில், இந்திய போலீஸ் சீருடையில் அங்கு வந்த பயங்கரவாதிகள், முகாமிற்குள் நுழையும் முயற்சியாக, அங்கு காவலுக்கு நின்ற வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கியால் சரமாரியாகவும் சுட்டனர்.
சுமார் 13 மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் 3 பயங்கரவாதிகளும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.