விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.
‘பிக் பாஸ் 5’ முதல் மூன்று சீசன்களைப் போலவே இந்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கும்.
தொகுப்பாளர் கமல் ஹாசன் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்.
இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு, ‘பிக் பாஸ் 5’ தயாரிப்பாளர்கள் கமலுக்கு பதிலாக சிம்புவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் தவகல்கள் கசிந்துள்ளது.
தொகுப்பாளர் மாற்றம் நடைபெறுமா இல்லையா என்பது நடக்கவிருக்கும் தேர்தலை பொறுத்து நிகழும்.
பிக் பாஸ் 5-ல் கலந்துக் கொள்பவர்களின் பட்டியலும் இணையத்தில் வெளியாகின. இதில் நடிகர் நகுலின் பெயரும் அடிப்பட்டது. இந்நிலையில் அவர் இந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.