சென்னை:
மிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தோர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தலைவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மாநில தலைவர் எல்முருகன் பேசுகையில், சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்றார்.

‘ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்கவும் பாஜக தயார். அதேசமயம், தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றார்கள். தற்போது தாமரை மலர்ந்துள்ளது’ என எல்.முருகன் கூறினார்.