நெல்லை: நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயில் இன்று நெல்லை வழியாக வந்து கொண்டிருந்தது. கங்கைகொண்டான் ரயில் நிலையம் அருகே  வந்து கொண்டிருந்த போது ரயிலின் எஸ் 3 பெட்டியில் தீப்பிடித்து புகை வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலில் இருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது. இதையடுத்து, அரை மணி நேர தாமதத்திற்கு பின்னர் மாலை 5 மணியளவில் ரயில் புறப்பட்டது.