தமிழ்நாட்டில் சிவாஜி குடும்பத்தில் சிவாஜி, தவிர அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் நடிகர்களாக ஜொலிப்பது தெரிந்த விஷயம்.
சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரும், ’ஐ’படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இதேபோல், தெலுங்கு சினிமா உலகில் நடிப்பு குடும்பம் என்று நாகேஸ்வர ராவ் குடும்பத்தை சொல்லலாம்.
இந்த குடும்பத்தின் தலைவர் நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகார்ஜுனா, பேரன்கள் நாக சைதன்யா, அகில் ஆகிய நான்கு பேரும் இணைந்து ‘மனம்’ என்ற படத்தில் நடித்திருந்தனர், விக்ரம் கே.குமார் இயக்கி இருந்தார்.
படம் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. 6 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்தப்படம் இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நாகேஸ்வரராவ் நடித்த கடைசி படம் இது.
‘மனம்’ போன்று மீண்டும் ஒரு ‘குடும்ப’ படத்தை கொடுக்க நாகார்ஜுனா திட்டமிட்டுள்ளார்.
நாகார்ஜுனா, அவரது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் இதில் நடிக்க உள்ளனர்.
இந்த ‘மல்டி ஸ்டார்’ படத்தை ராகுல் ரவீந்திரன் டைரக்டு செய்கிறார்.
இவர், நாகார்ஜுனாவை வைத்து ஏற்கனவே , ‘கியூபிட்-2’ என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார்.
– பா. பாரதி