ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் கூலி.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கம் மூலம் அறிவித்து வருகிறார்.
சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனா இணைந்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தனுஷின் குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாகார்ஜுன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.