டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி வரை 26.70% வாக்குப்பதிவு; நாகாலாந்தில் 35.76% வாக்குகளும் பதிவாகி உள்ளன.


வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனப்டி, கடந்த 16ம் தேதி 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 86 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மேகாலயாவில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் இன்று நாகாலாந்து மற்றும் மேகாலாய சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை முதலே வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வத்துன் செலுத்தி வருகின்றனர்.

மேகாலயா பாஜக தலைவரும், மேற்கு ஷில்லாங் தொகுதியின் வேட்பாளருமான எர்னஸ்ட் மாவ்ரி தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தொகுதியில் நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுவேன் என்பதை எனது வாக்கும், மக்களின் வாக்குகளும் தீர்மானிக்கும் என நம்புகிறேன் என்று கூறினார். மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மேகாலயாவில் இன்று காலை  9 மணி நிலவரப்படி 12.06 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 15.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 11 மணி வரை மேகாலயாவில் 26.70% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

நாகாலாந்தில் 35.76% வாக்குகளும் பதிவாகி உள்ளன.