பொறையாறு:

ரசு போக்குவரத்துக் கழக பணிமனை இடிந்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 8 பேர் இறந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதன் காரணமாக  பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் வெங்கடேசன் மரணமடைந்துள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில், ஊழியர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அறையின் மேற்கூரை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த அறையில் தூங்கிகொண்டிருந்தவர்களில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவினார்.

விபத்து நடைபெற்ற இந்த ஓய்வறை 1945ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பழமையான இந்த கட்டிடத்தை சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததால், பணி முடித்து வந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

சம்பவ இடத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து பொறையார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தது குறித்து செய்தியறிந்த உயிரிழந்தவர்களின்  உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியறிந்து ஸ்பாட்டுக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பலியான டிரைவர்கள்

இறந்தவர்களின் விவரம்:

1. அன்பரசன் (நா கை, திருக்குவளை மணக்குடி)

2. தனபால் ( புதுச்சேரி, காரைக்கால்)

3. பிரபாகரன் (நாகை, தரங்கம்பாடி)

4. சந்திரசேகரன்நா (கை, தரங்கம்பாடி தாலுகா கீழையூர்)

5. முனியப்பன் (நாகை, கீழபெரம்பூர்)  சேர்ந்த

6. .பாலு (நாகை, காளகஸ்திநாதபுரம்)

7. ராமலிங்கம் (நாகை, சிக்கல் தெற்கு வீதி)

 8. வெங்கடேசன் நடத்துநர்  மரணமடைந்துள்ளார்.

சேர்ந்த  உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து பேசிய  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமி மிழகம் முழுதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும்  பலியானவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.