நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்ததாக நாகார்ஜுனா அறிவித்துள்ளார்.

தெலுங்கு பட முன்னணி நட்சத்திரமும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் அவருக்கு மற்றொரு நடிகையுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

நடிகை சோபிதாவுக்கும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற போவதாக நேற்று சமூக வலைதளத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டது.

https://x.com/iamnagarjuna/status/1821450886238851531

இன்று காலை 9:42 மணிக்கு நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சோபிதாவை தங்கள் குடும்ப உறுப்பினராக வரவேற்பதில் மகிழ்ச்சி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.