
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன.
சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை என்றும், 4 மாதங்களாகவே தனியாகத்தான் வசித்து வருகிறார் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பை மீறியே பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தார் என்றும், இதுவே பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]