
சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து நாக் அஸ்வின் இயக்கிய படம் ‘மஹாநடி’. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதனால் இந்திய அளவில் நாக் அஸ்வின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் மூடி கிடைக்கும் திரையரங்குகள் , ஊரடங்கு முடிந்த பின் இயல்பு நிலைக்கு எப்படி வரும் எப்போது வரும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது .
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் மக்களைத் திரையரங்கிற்கு வரவைக்க யோசனை ஒன்றை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.
So true…it will keep the family audience away…can be an option at few multiplexes maybe, but not a solution…wat do u think theaters need to do to get ppl back? to increase audience…will you come back as soon as theaters open or wait & watch for a few weeks before going?
— Nag Ashwin (@nagashwin7) May 15, 2020
“ஒருமுறை சுரேஷ்பாபு மற்றும் ராணா இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தபோது, வெளிநாடுகளைப் போல தியேட்டர்களில் பீர், மது விற்பதற்கு உரிமம் கொடுக்கப்பட்டால் அது கூட்டத்தை அதிகப்படுத்துமா என்ற பேச்சு வந்தது. அதன் மூலம் திரையரங்கத் தொழிலைக் காப்பாற்ற இயலுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது நல்ல யோசனையா? அல்லது தவறான யோசனையா?” என்று தெரிவித்தார்.
இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புக்கள் அதிகரிக்கவே “முற்றிலும் உண்மை. அது ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு வருவதைத் தடுக்கும். ஒரு சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வேண்டுமானால் அனுமதிக்க முடியும். ஆனால் அது தீர்வு கிடையாது. மக்களை மீண்டும் வரவைப்பதற்கும், பார்வையாளர்களை அதிகரிக்கவும் தியேட்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள். தியேட்டர்கள் திறந்தவுடனேயே நீங்கள் படம் பார்க்கச் செல்வீர்களா? அல்லது சில வாரங்கள் காத்திருப்பீர்களா?” என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நாக் அஸ்வின்.