சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்த செய்துள்ள உயர்நீதி மன்றம் மீண்டும் தேர்தலை நடத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், இரு பிரிவாக செயல்பட்ட வரும் நடிகர் சங்க நிர்வாகிகள் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர்.

விஷால் தரப்பினர் மேல்முறையீடு செய்வோம் என்று கூறி வரும் நிலையில், நடிகர் ஐசரி கணேஷ் தலைமை யிலான பிரிவினர், மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கூறி வருகின்றனர்… இதனால் காரணமாக நடிகர் சங்கத்தில் மீண்டும் பரபரப்புகளும், பஞ்சாயத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

2015 – 2018-ம்  ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பதவிக்காலம் முடிந்தும் தேர்தல் நடத்ததால், எதிர் அணியினர் வழக்கு தொடர்ந்தன. அதையடுத்து, நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் கடந்த ஆண்டு (2019) ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் என்ற பெயரில் எதிரணி உருவானது. இதில் ஐசரி கணேஷ் உள்பட, விஷால் மீது அதிருப்தி கொண்ட பலர் இணைந்து போட்டி யிட்டனர். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டால், தேல்தல்முடிவு அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. விஷால், நாசர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்து அடுத்த 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தீர்ப்பில்,  வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்த தேர்தல் செல்லாது. இதனால்கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார்.

மேலும், நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை தற்போதைய சிறப்பு அதிகாரியான கீதாவே தொடர்ந்து கவனிப்பார் என உத்தரவிட்டு தமிழக அரசின் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஷால் தரப்பை சேர்ந்த பூச்சி முருகன், தாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்றும், உச்சநீதி மன்றம் வரை செல்வோம் என்று கூறியவர், நடிகர் ஐசரி கணேஷ் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ் தலைமையிலான சங்க நிர்வாகிகள் மறுதேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றவர், விஷால் அணியினர் மேல்முறையீடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குகள் காரணமாக, பல நடிகர்கள் , நடிகைகள் ஓய்வூதியம் கிடைக்காமல் அல்லல் பட்டு வருவதாகவும், மேலும், வழக்கை மேல்முறையீடு செய்வதால், நலிவடைந்த நடிகர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.  நடிகர்களின் பஞ்சாயத்து, மீண்டும் நடிகர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.