தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பார்க்கும்போதுதான் இவர்களுக்கெல்லாம் வயதே ஆகாதா என்று கேட்கத் தோன்றும்.அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நதியா.
1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான போதிலும் இன்றும் அவர் இளமையாகவே இருக்கிறார் என்பதே அனைவரின் கேள்வியும் .
1988 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் உடன் தான் “பூமழை பொழியுது”, திரைப்படத்தில் நடித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “விஜயகாந்துடன் நான் நடித்த முதல் படம் “பூமழை பொழியுது”. அழகப்பன் இயக்கிய இந்த படத்திற்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். இந்த படத்தில் தான் முதன்முதலாக வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஜப்பான், ஹாங்காங் நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது” என்று பதிவிட்டுள்ளார் நதியா.