‘24ம் புலிகேசி’ பட சர்ச்சையை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த ஐந்து படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், ‘நாய் சேகர்’ என்ற தலைப்பின் உரிமை வேறொரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் உள்ளதால் அந்த உரிமையைப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தையும் நடைபெற்று தோல்வியுற்றது.

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது.

வடிவேலுவின் ரீஎன்ட்ரி படமாக அமையவுள்ள இப்படத்தில் கதாநாயகி கதாப்பாத்திரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று லைகா புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வைகை புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

[youtube-feed feed=1]