வேலூர்:

நாட்றம்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக  மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சலுக்கு 15 வயது அரசு பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் பகுதி குனிச்சியூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனி இவருக்கு இரண்டு மகள் இளைய மகள் அகல்யா 15 வயது இவர் பர்கூர் அரசு பள்ளி 10 ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வருகிறாள்

சில தினங்களுக்கு முன்பு அகல்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதி காப்பாளர் அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தார் அகல்யாவை அவருடைய பெற்றோர் அழைத்து வந்து புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த அகல்யா சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு இதனால் அப்பகுதியில் பெரும் பீதி அடைந்து வருகின்றனர் பள்ளி மாணவி இறப்பை குறித்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில்,  அதே பகுதியை சேர்ந்த திம்மறாயன் இவரது மகன்கள் சேகர் .சங்கர் இருவரும் மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்ய கூடாது இந்த மயானத்தில் எங்களுக்கு 15 சென்ட் இடம் உள்ளது என்று பிணத்தை புதைக்க கூடாது என்று தடங்கள் செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் உமாரம்மியா மற்றும் போலீசார் சமரசம் செய்து நாளை சர்வே செய்வதாக கூறி சமரசப் பேச்சுவார்த்தை செய்து பிணத்தை அடக்கம் செய்ய வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.