ஹோன்ஷு:
ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்களை பீதியை கிளப்பியுள்ளது.
ஆயிரக்கணக்கான காகங்கள் கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான ஹோன்ஷுவில் தரை, வானம், கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் பறப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியைந்தனர்.
தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் விசித்திரமான வீடியோவை பல பயனர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரு இடத்தில் கூடுவது இயற்கை பேரழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel