மிஷ்கின் தயாரிப்பில் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் படம் ‘பிதா’.
‘பாக்ஸர்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் மதியழகன்.
‘பிதா’ படத்தை மிஷ்கின் மற்றும் ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதாரவி, மதியழகன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், சில நடிகர்களையும் இதில் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பி சிறிய பூஜையுடன் தொடங்கியுள்ளது .
இந்நிலையில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்த படம். பிதா படத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது..


ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிதா என்ற படத்தின் பிரமோஷன் புகைப்படங்களில் எங்களது கம்பெனியின் லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம். இந்த குறிப்பிட்ட படத்தில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் எந்த விதத்திலும் ஈடுபடவில்லை மற்றும் தொடர்பிலும் இல்லை. இந்த பிரமோஷன் புகைப்படங்களை எங்களுடைய லோகோ மற்றும் பெயருடன் இனியும் பரப்ப வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

[youtube-feed feed=1]