சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்திருந்தார். பின்னர், பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அழைப்பு விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, வடபழனி முருகன் கோவில் உள்பட 10 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மயிலை கபாலீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உள்பட 5 கோவில்களில் இன்று நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள மலை கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.