சென்னை: தனது மகன் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் நடிகை திரிஷா பதிவிட்டு அலப்பறை செய்துள்ளார். இதை சில நெட்டிசன்கள் வரவேற்றாலும் பலர் கழுவி ஊற்றி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தற்போது 41 வயதாகும் திரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜயுடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நடிகை கீரித்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் உடன் திரிஷாவும் தனி விமானத்தில் சென்றது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திரிஷா தற்போது நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த விடாமுயற்சி என்பட படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுதவிர இவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவரது பொழுதுபோக்கே நாய்களை கொஞ்சி மகிழ்வது என்று கூறப்படுகிறது. அதற்காக அவர் தனது வீட்டில் பல வகையான நாய்களை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அவர் பிரியமாக வளர்த்த நாய் ஒன்று இறந்து விட்ட நிலையில், தனது மகன் இறந்து விட்டாதாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தனது பேவரைட் நாயின் பெயர் ஜாரோ. இந்த நாயை கடந்த 2012-ம் ஆண்டு முதல் வளர்த்து வருவதாகவும், இந்த ஜாரோவை தன் மகனாகவே வளர்த்து வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
என் மகன் ஜாரோ இன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை உயிரிழந்து விட்டான். இனிமேல் என் வாழ்க்கை ஒருதுளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது, என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். நானும் என் குடும்பத்தாரும் உடைந்துவிட்டோம். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். இதனால் சிறிது காலம் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, ரேடாரில் இருந்து விலகி இருப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜாரோ அடக்கம் செய்தபோது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் திரிஷா. இதைப்பார்த்த நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலர் திரிஷாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.