திருவனந்தபுரம்: கொரோனா பாதிக்கப்பட்ட கேரள மாணவி ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய சோகம் நடந்துள்ளது. இதை  காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் பாராட்டியுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொது சேவை ஆணைய வேட்பாளரான கோபிகா கோபன் கடந்த சில நாட்களாக உதவி பேராசிரியர் பதவிக்கான தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். அந்த தேர்வு  கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 2ந்தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்றைய தினம் தேர்வு நடைபெற்றது.

இதற்கிடையில், கோபிகா கோபன் கொரோனா தொற்றுக்கு ஆளானார். கடந்த வாரம் சனிக்கிழமை (அக்டோபர் 28ந்தேதி) அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் தேர்வை கண்டிப்பாக எழுதியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், மருத்துவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்சில் அமர்ந்து, பாதுகாப்பாக தேர்வுகைள எழுதினார். அவரது அயராத நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த  காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி-ஆன சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில், அதன் பெண்ணின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. அத்துடன்,  கொரோனா  துன்பங்களை எதிர் கொண்டு தனது ஆசையை நிறைவேற்ற கோபிகா எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்றும், எனது  சார்பாக துணிச்சலான மற்றும் உறுதியான முடிவை எடுத்த கோபிகாவிற்கு எனது வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோபிகாவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]