நடிகை ஸ்ருதிஹாசன், அறுவை சிகிச்சை மூலம் தனது உதட்டை அழகுபடுத்தியதாக பரபரப்பான தகவல் வெளியானது. (ரொம்ப முக்கியம்!) உடனே நெட்டிசன்கள், இந்த முக்கிய பிரச்சினை குறித்து சமூகவலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதைப் பார்த்து ஆத்திரமான ஸ்ருதிஹாசன், “என் உதடு! என் உரிமை! இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை!” என்று “புரட்சி முழக்கம்” எழுப்பியிருக்கிறார்.  (நகை வாங்க, புடவை வாங்க எல்லாம் “புரட்சி முழக்கம்” எழுப்பும்போது, உதடுகளுக்காக எழுப்பக்கூடாதா என்ன?)

“நடிகையையோ நடிகரோ, அந்தந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னுடைய உடலை ஏற்றவோ, குறைக்கவோ வேண்டியிருக்கும். ஒரே மாதிரியான வடிவமைப்பை எந்தவொரு நடிகரும் எப்போதும் வைத்திருக்க முடியாது” என்று கூறியிருக்கும் ஸ்ருதி, “ என் உதடு, முகம், உடல்  அமைப்பை நான் என்ன செய்தாலும், அது பற்றி பேச எவருக்கும் அனுமதி இல்லை.  சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி எழுதுவதை நான் பொருட்படுத்தவே இல்லை. என் உதடு. என் உரிமை” என்று புரட்சி முழக்கம் எழுப்பியிருக்கிறர் ஸ்ருதி.

 

ஆனால் கடைசி வரை, உதடு ஆபரேசன் நடந்ததா இல்லையா என்பதை சொல்லவே இல்லை ஸ்ருதி!