சென்னை: என் கடைசி போட்டி சென்னையில்தான் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கான பாராட்டு விழா  சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையை முதல்வர் மு.கஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். பின்னர்,  முதல்வரின் பெயரும் 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய CSK கேப்டன் எம்.எஸ்.தோனி, “2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை உடனான உறவு தொடங்கியது. சென்னையில்தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன்.

சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. மற்ற அணியின் வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்து வார்கள். அதுதான் அவர்களது சிறப்பியல்பு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக செயல்படாதபோதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்லமுடியாது.” எ

இவ்வாறு அவர் கூறினார்.