சென்னை:

ரஃபேல் ஆவணம் போலத்தான் நான் பள்ளியில் படிக்கும்போது, எனது ஹோம் ஒர்க்கும் காணாமல் போனது என்று நடிகர் சித்தார்  நக்கல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

ரஃபேல் தொடர்பாக நேற்று   உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற  விசாரணையின்போது,  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவனங்கள் திருடு போய் விட்டதாக மத்தியஅரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள், மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. சமூக வலைதளங்களிலும், கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசையும், இந்துத்வா அமைப்புகளையும் கடுமையாக சாடும், நடிகர் சித்தார்த், சமீபத்தில் புல்வாமா தாக்குதலை அரசியலாக்கி வரும் மோடிக்கு,  உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ரஃபேல் ஆவனங்கள் தொடர்பாகவும் டிவிட்டர் பக்கத்தில் பாஜக அரசை நக்கல் செய்து பதிவிட்டு உள்ளார்.

அதில்,  “எனது பள்ளி நாட்களில்கூட, எனது ஹோம்ஒர்க்  நோட்டுகள் இப்படித்தான் காணாமல் போனது. இதை நான் ஆசிரியரிடம் கூறியதால், அவரை  ஒரு பிரம்பால் அடித்து, முட்டுப்போட வைத்து தண்டனை வழங்கினார்… அது அந்தக் காலம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, ரஃபேல் ஆவனங்கள் காணாமல் போனதற்கு, ஆட்சி செய்து வரும்  மோடி அரசுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதை நாசூக்காவும், நக்கலாவும் தெரிவித்து உள்ளார்.