டில்லி:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது சகோதரன் ராகுல்காந்தி தனி ஒருவனா கவே தேர்தல் களத்தில்  காங்கிரஸ் வெற்றிக்காக போராடினார், அவருக்கு யாரும் உதவி செய்ய வில்லை என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

கடந்த 5 ஆண்டு மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ரஃபேல் ஊழல்  போன்றவை காரணமாக மக்கள் பாஜக அரசுமீது வெறுப்புடன் இருந்து வந்த நிலையில், அதன் பலனை அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததுள்ளது. இது காங்கிரசார் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தோல்வி குறித்து ஆராய கசடந்த 25ந்தேதி டில்லி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. காரசாரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் போன்றவர்களை நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தியுடம் காங்கிரஸ் மூத்த தலைவர் கள் உள்பட பலரை கடுமையாக சாடினார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்தபோது, அதை மூத்த தலைவர்கள் பலர் ஏற்க மறுத்து அவரை சமாதானம் செய்துள்ளார்கள். அப்போது கோபமடைந்த பிரியங்கா,

” இப்போது என் அண்ணனைச் சமாதானம் செய்கிறீர்களே, நீங்கள் எல்லாம் பிரச்சாரத்தின் போது எங்கே சென்றீர்கள்? என் கேள்வி எழுப்பினார்.

எனது  அண்ணன் தனியாக தேர்தல் களத்தில் போராடினார். அவர் தனக்காகவா தேர்தல் களத்தில் போராடினார்? என்று கேள்வி எழுப்பியவர்,  என் அண்ணனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் யார் பேசினீர்கள்?

தேர்தல் பிரசாரத்தில் முதன்மை குற்றச்சாட்டாக மோடி அரசு மீது அவர் பிரச்சாரம் செய்த ரஃபேல் ஊழல், சவுகிதார் சோர் ஹை போன்ற கோஷத்தை யார் முன்னெடுத்துப் பேசினீர்கள்  என்று கேள்வி எழுப்பியவர், 

கட்சியின் தோல்விக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்,  யாரும் தட்டிக்கழிக்கமுடியாது” என ஆவேசமாக பேசினார்

விவாதத்தின்போது அவ்வப்போது குறுக்கிட்டு பேசிய பிரியங்கா, ” நீங்கள் தற்போது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். அப்படி செய்தால், அது பாஜக வலையில் வீழ்ந்தது போல ஆகிவிடும்” என்று ஆலோசனை கூறியவர், இடையிடைய பல மூத்த தலைவர்களையும் சாடியதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது,  கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அவருக்கு உதவவில்லை என்று குற்றம் சாட்டியவுர், மூத்த தலைவர்கள் யாரும் தேர்தல் வெற்றிக்காக  எந்தவொரு புதிய யுத்தியோ, பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை என்றும், தனது சகோதரனை மட்டும்  தேர்தல் பிரச்சாரத்தில் தனியாக விட்டுவிட்டனர் என்றும் பகிரங்கமாக சாடியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.