தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடைபெற்ற விழாவில் இன்று வெளியிட்டார்.

ராகுல் காந்தி பேசியபோது, “எனது ரத்தம் இந்த மண்ணோடு கலந்திருக்கிறது” என்று உருக்கமாக கூறினார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக பேசிய என்னை நீங்கள் ஏன் தமிழ் நாட்டிற்காக வாதிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் தமிழன்” என்று கூறியதும அந்த அடிப்படையில் தான் என்று குறிப்பிட்டார்.

https://twitter.com/s_kanth/status/1498299191285542913

முன்னதாக விழாவில் பேசியபோது முதல்வர் மு.க. ஸ்டாலினை தனது மூத்த சகோதரர் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி தனது இளமையின் ரகசியம் குறித்து மு.க. ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுதவேண்டும் என்று கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, கருணாநிதியின் மகள் செல்வியுடனும் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறனுடனும் தோழமையோடு சகஜமகா பேசிக்கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் மல்லிகா மாறனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றது முக்கிய தருணங்களாக அமைந்தது.