புதுடெல்லி:

முஜாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் கூறிய 2 பேரை 3 மாதங்களுக்குள் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பீகார் மாநிலம் முஜாஃபர்பூர் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் வன்புனர்வு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காப்பகத்தில் இருந்து 11 சிறுமிகளை காணவில்லை. மேலும் இந்த காப்பகத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் வன்புனர்வு செய்ததாக, 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பாட்னாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிவேதிதா தாக்கல் செய்த மனுவில், சிறுமிகள் ஓட்டலுக்கு அனுப்பப்பட்டதாகவும், தாக்கூரில் நண்பர்கள் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தொப்பையுடன் இருந்த ஒருவரும், மீசைக்காரர் ஒருவரும் தங்களை தொடந்து பாலியல் வன்புனர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.   இதனை சிபிஐ கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தில் அடையாளம் காட்டிய அந்த 2 பேரையும் 3 மாதங்களுக்குள் கைது செய்ய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.