டெல்லி:

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது. ஒவவொருவரும்  கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், வெளியே செல்லும்  நோய்தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து,  மத்திய அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வரும் பட்சத்தில் அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. குறைந்தபட்சம் கைக்குட்டையாவது பாதுகாப்பு கவசமாக அணிய வேண்டும் என்றும், சமூக பரவல் ஆவதை தடுக்க மாஸ்க் அணிந்து ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. முகக்கவசங்களை அணிவதால் நோய் பரவலைத் தடுக்க முடியும். முடிந்தவரை வீட்டிலேயே உருவாக்கி முகக்கவசங்களை அணிவது நல்லது. கைக்குட்டை உள்ளிட்டவற்றையும் மாஸ்க்காக பொதுமக்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்து உள்ளது.