கோப்பால்:

முஸ்லிம்கள் எங்களை நம்புவதில்லை. எனவே, நாங்கள் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை  என்று கர்நாடக  மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பபா  நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது  கூறினார்.  இது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை மேற் கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வரும் 18ந்தேதி 14 தொகுதிகளிலும், ஏப்ரல் 23 ம் தேதி 14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கர்நாடக மாநில பாஜக தலைவராக இருப்பவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, நாடாளுமன்ற தேர்தலை யொட்டி  பாஜக வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

வடக்கு கர்நாடகா கோப்பாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஈஸ்வரப்பா, அங்கு அதிகமாக வசிக்கும்  குருபா மற்றும் சிறுபான்மை சமூகத்தினரைக் குறிப்பிட்டு பேசினார். அப்போது,  பா.ஜ.க. அதிகாரத்தில் இருக்கும்போதும், இஸ்லாமியர்கள் தங்களை நம்பவில்லை இதன் காரணமாகவே, நாங்கள் ​​முஸ்லீம் வேட்பாளர்களை வற்புறுத்துவதில்லை என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியும்,  அவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே உபயோகித்துக்கொள்கிறது என்றவர், அவர்களும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று கூறியவர்,  நீங்கள் ஏன்  எங்களை நம்பவில்லை என்று கேள்வி எழுப்பியவர்,  எங்களை நம்புங்கள், நாங்கள் உங்களுக்கு தேர்தலில் போட்டியிடடிக்கெட் மற்றும் பல சலுகைகள் வழங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.