பாட்னா:

குடியரசு தினத்தன்று, கொடிஏற்றும் நிகழ்ச்சியின்போது வந்தே மாதம் சொல்லாத முஸ்லிம் ஆசிரியருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் காதீர் மாவட்டம் அப்துல்லாபூர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் குடியரசு தினத்தன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பள்ளியில்  அப்சல் உசைன் என்பவர் ஆங்கில ஆசிரியராகவும், உருது ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

குடியரசு தின விழாவில் கொடி ஏற்றும்ம் நிகழ்ச்சிக்கு அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்தி ருந்தனர். கொடி ஏற்றும் , மாணவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும்  வந்தே மாதரம் என கூறினர். ஆனால், ஆசிரியர் அப்சல் உசைன் வந்தே மாதம் சொல்லாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட கிராமத்தினர், ஆசிரியர் அப்சல் உசைனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் உசைன்,  நாங்கள் அல்லாவின் மீது நம்பிக்கை வைத்து உள்ளோம். வந்தே மாதரம் எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்று தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.