லண்டன்:

சிறுவன் ஒருவன் இஸ்லாமிய முதியவரை கிறிஸ்துமஸ் தாத்தாவாகவே நினைத்து வாழ்வதை சுவாரஸ்யமாக சொல்லி மகிழ்கிறார்கள் லண்டன்வாசிகள்.

கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே உலகெங்கிலும் சிறுவர்களுக்கு உற்சாகம்தான். கிறிஸ்துமஸ் நேரத்தில் உண்மையாகவே அவர் வந்து பரிசு பொருட்களை அளிப்பார் என்ற நம்பிக்கை சிறுவர்களுக்கு உண்டு.

அப்படி ஓர் சிறுவனுக்கு நிஜமாகவே கிறிஸ்துமதஸ் தாத்தா பரிசுகளை அளித்து வருகிறார். ஆம்  அவரை அந்த சிறுவன் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறான்.

அதே போல்தான் லண்டன் நகரின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் ஆறுவயது சிறுவன் ஆல்ஃபிக்கும். கடந்த 2013 ஆம் வருடம் அவன்  குழந்தையாக இருந்த சமயம்… அவன் வீட்டு வழியாக  வழியாக சென்ற இஸ்லாமிய முதியவர் செல்ல..  அவரைப் பார்த்த ஆல்ஃபிக்கு அவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா  என்று தோன்றியிருக்கிறது.

உடனடியாக  ஆல்ஃபி, தனது தாய் ட்ரேசியிடம் இதோ கிறிஸ்துமஸ் தாத்தா என்று உற்சாகமாக கூவியிருக்கிறான். அதோடு ஓடிப்போய் அவரைக், கட்டிக்கொண்டான்.

இது அந்த முதியவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்த.. உடனே கிறிஸ்துமஸ் பரிசாக தன்னிடம் இருந்த பணத்தை அளித்திருக்கிறார்.

அன்று முதல் இன்று வரை ஆல்ஃபிக்கும் அவனுடைய சகோதரி ஹேலிக்கும் அடிக்கடி ஏதாவது பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அந்த பெரியவர். அந்த இரு குழந்தைகள் மீதும் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் அந்த முதியவர்.

ஆல்ஃபியின் தாய் ட்ரேசி,  “அந்த தினத்தை என்னால் மறக்க முடியாது.  குழந்தையான ஆல்ஃபி இதோ கிறிஸ்துமஸ் தாத்தா என தெருவில் சென்ற ஓடிச் சென்று ஒருவரை கட்டிக் கொண்டான்.   நான் வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து குழந்தையை இழுத்து வந்தேன்.   அவர் புன்னகையுடன், எனது மகனிடம் பரிசாக பணத்தைக் கொடுத்து விட்டு எங்களைப் பற்றி விசாரித்து விட்டு சென்றார்.  அதன் பிறகு ஆல்ஃபி மற்றும் அவன் சகோதரி ஹேலியின் பிறந்தநாள் மற்றும் விசேச தினங்களுக்கு அவர் பரிசளிக்கத் தவறியதில்லை  ” என்று நெகிழ்வாகக் கூறுகிறார்.

ஆல்ஃபி இன்னமும் அவரை கிறிஸ்துமஸ் தாத்தா என்றே நம்பிக்கொண்டிருக்கிறான்.

அந்த முதியவர் பெயர் ஹுசைன்.   தனியார் நிறுவனம் ஒன்றில்  கணக்காளராக பணிபுரிகிறார். “சிறுவன் ஆல்ஃபா, என்னை கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஓடிவந்து கட்டிக்கொண்டவுடன் எனக்குள் ஏற்பட்ட பரவசத்தைச் சொல்லி முடியாது.  அவனது அன்பையும் நம்பிக்கையும் காக்கும் வண்ணம் ஒவ்வொரு விழாக்களுக்கும் பரிசு அளித்து வருகிறேன். அவன் வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் இருவருக்குமிடையேயான பாசம் குறையாது” என்று மகிழ்ந்து சிரிக்கிறார்.

“இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பிரிட்டனில் சில தாக்குதல் நடத்தப்பட்டது உண்டு. அதனால் இஸ்லாமியர் என்றாலே பிற மக்கள் அச்சத்துடன் நோக்கம் சூழலும் நிலவுகிறது. ஆனால் இஸ்லாமியர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல என்றாலும்,  பிரிட்டன் மக்களிடம் அது போன்ற ஒரு எண்ணம் இருப்பதை மறுக்க முடியாது. இஸ்லாமியர் சிலர் வெள்ளை அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது உண்டு.

இந்த நிலையில் அன்பு செலுத்த மத பேதம் இல்லை என்பதை  இஸ்லாமிய பெரியவரான ஹூசைன் –  கிறிஸ்துவ சிறுவனான ஆல்ஃபா இடையே நிலவும் பாசம் வெளிப்படுத்துகிறது” என்கிறார்கள் பிரிட்டன் வாழ் சமூக ஆர்வலர்கள்.