டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால், ஆண்டு இறுதி தேர்வு தொடங்க உள்ளதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த 2022ம் அண்டு பிப். 5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளின் தூண்டுதலின் பேரில், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் மூண்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் 2002ம் அண்டு மார்ச் 15-ம் தேதி பரபரப்பு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியத. இதையடுத்து, இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக முஸ்லிம் மாணவிகள் தரப்பில், இடைக்கால உத்தரவு வழங்கக்கோரி கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், மார்ச் 9ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்க இருப்பதால் வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மாணவிகளின் கோரிக்கை பரிசீலித்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளார்.