முஸ்லிம் குழந்தைகள் மரணம்: தடுப்பூசியை தடை செய்திருக்கிறதா இஸ்லாம்?

Must read

நெட்டிசன்:
பி இளங்கோ சுப்பிரமணியன் (Ilango Pichandy) அவர்களின் முகநூல் பதிவு:
காட்சி-1: இடம்: கோழிக்கோடு அரசு மருத்துவமனை.
முகமது அஃபஸ் என்னும் 14 வயதுச் சிறுவன்  அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப் படுகிறான். அவனுக்கு  தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) நோய்.    மூச்சு விடவே மிகவும் சிரமப் படுகிறான்.
அறுவை சிகிச்சை நடக்கிறது என்றாலும் அதற்குள் அவனின் உடல் முழுவதும் நஞ்சாகி விடுகிறது. டிப்தீரியாவை உண்டாக்கும் கொடிய வைரஸான Corynebacterium diphtheria சிறுவனின் உடலை நஞ்சாக்கி விடுகிறது. சிறுவன் இறந்து விடுகிறான்.
அறுவை சிகிச்சை செய்து அவன் உயிரைக் காப்பாற்றப் போராடிய டாக்டர் பீனா உம்மன் வருத்தத்துட ன் கூறுகிறார்: ஒரே ஒரு தடுப்பூசியை முன்பே போட்டிருந்தால், இந்தச் சிறுவன் உயிர் பிழைத்திருப்பான் என்கிறார். ஆம், சிறுவன்
முகமது அஃபசுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
a
காட்சி-2: இடம்: கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள்.
முஸ்லிம்கள் மிக மிக அதிகமாக வசிக்கும் கேரளத்தின் இரு மாவட்டங்கள் கோழிக்கோடும் மலப்புரமும். இங்கு ஷரியத் சட்டமே ஆட்சி செலுத்துகிறது.
முஸ்லிம் பெருமக்களே, உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி (vaccination) போடாதீர்கள். அது ஷரியத்
சட்டப்படி ஹராம் செய்யப்பட்டது (தடுக்கப்பட்டது)  என்று இஸ்லாமிய மதகுரு ஒருவர் மலப்புரத்தில்
ஆயிரக்கணக்கில் திரண்ட கூட்டத்திடம் பேசுகிறார்.
தடுப்பூசி ஒரு மேற்கத்திய சதி. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான எல்லா சக்தியையும்
அல்லா வழங்கி விடுகிறார். எனவே ஹராம் செய்யப்பட்ட தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போடாதீர்கள்
என்று முஸ்லிம் மதகுரு ஆவேசமாகப் பேசுகிறார்.
மலப்புரத்தில் மட்டும் 16 வயதுக்கு உட்பட்ட ஒன்றே முக்கால் லட்சம் குழந்தைகள் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) வராமல் தடுக்கும் தடுப்பூசியைப் போடாதவர்கள் என்று கேரள அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது.
காட்சி-3, இடம்: கோழிக்கோடு மருத்துவமனை
மருத்துவரும் அறுவை சிகிச்சை நிபுணருமாகிய  டாக்டர் வி உமர் பரூக் (Dr V Ummer Farook) என்பவர்
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்   போது கூறுகிறார்:
ஜமாத் இஸ்லாமி (jamaat e Islami) போன்ற அமைப்புகள்  தடுப்பூசிக்கு எதிராகச் செய்த பிரச்சாரம்
மக்களிடம் பரவியதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்து, தங்கள்
பிள்ளைகளை பலி கொடுக்கின்றனர் என்று.
தம் என்றுமே அறிவியலுக்கு எதிரானது!
ஆங்கில இந்து ஏட்டில் (The Hindu, Chennai,  july 9, 2016, page-13) நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. முழுப்பக்கக் கட்டுரை.  அதில் உள்ள செய்தியே மேலே தரப்பட்டுள்ளது. அக்கட்டுரையை அனைவரும் படிக்குமாறு
வேண்டுகிறோம்.
உலக சுகாதார மன்றம் (WHO) இந்தத் தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு
நாடுகளிலும் இந்தத் தடுப்பூசி போடப் படுகிறது.  இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இது
இலவசமாகப் போடப்படுகிறது. கருவுற்று இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்திலேயே இந்த
ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.
முஸ்லிம் குழந்தைகளின் உயிரைக் குடிக்கும்  தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் தடை செய்யப்
பட வேண்டும். அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைளை மக்களிடம் பரப்பும் மதவெறி அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்” இவ்வாறு தனது பதிவில் தெரிவித்திருக்கிறார் இளங்கோ சுப்பிரமணியன்.
இதற்கு பதில் அளிக்கும்வகையில், “குர்ஆன் பிறந்த குழந்தைக்கு 2வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க கட்டளை இடுகிறது.”  என்று பின்னூட்டமிட்டிருக்கிறார் முஃபாரிஸ் மன்சூர் (Mufaris Mansoor ). அவரது பின்னூட்டம்:
நான் ஜப்பானில் நீண்ட காலம் குடும்பத்துடன் இருப்பவன்.எனக்கு இரண்டு குழந்தைகள்.ஒருவர் தாய் நாட்டில் பிறந்து8 மாதங்களில் ஜப்பானிற்கு வந்தவர்.மற்றவர் இங்கே பிறந்தவர்.இலங்கையில் பிறந்தவருக்கு அங்கு இருக்கும் வரை உள்ள தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டு ஜப்பான் வந்து அதே தொடரில் வரக்கூடிய அடுத்த ஊசி மருந்தையும் குழந்தைக்கு ஏற்றினேன்.(இந்த தடுப்பூசி யுனிசெப்பினால் அரங்கேற்றப்படுவதனால் அங்கேயும்,ஜப்பானிலும் ஊசி ஏற்றுவதற்காக ஒரே மாதிரியான கையேட்டை அரசாங்கங்களினூடாக வழங்கி வைத்துள்ளார்கள் என்பது வேறு கதை).
ஜப்பானில் பிறந்தவருக்கு,தடுப்பூசி போடுவதற்கான ஊசிகளின் விபரப்பட்டியலை(எப்போது,எங்கே ஊசி ஏற்றுவது என்ற விபரப்பட்டியலை) தருவதற்கு வீட்டிற்கும் city office இல் இருந்து ஒரு பெண் வந்தார்.(எங்கள் நாடுகளில் தாதி வருவது மாதிரி).நான் கதையைச்சுருக்குகிறேன்.அவரிடம் நான் கேட்டேன் ஜப்பானில் இந்த ஊசிகளை கட்டாயம் எடுக்க வேண்டுமா என்றும்,ஜப்பானியர்கள் எல்லோறும் இவைகளை எடுக்கிறார்களா என்றும் கேட்டேன்.அதற்கு அவர் இவைகளை கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற முறை இல்லை.அத்துடன் ஜப்பானியர்கள் எல்லோறும் எடுப்பதுவும் இல்லை என்றார்.இது எடுப்பது அவரவர் சுதந்திரம் என்றார்.இதில் எந்த வற்புருத்தலும் இல்லை என்றார்.(எங்கள் நாடுகளில் வற்புருத்தப்படுகிறது.).பிறகு நான் அவரிடம், ஊசியை ஏற்றாதவர்கள் எந்தக்காரணத்திற்காக எடுப்பதில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர் ஓரே வார்த்தையில் சொன்னார் இவைகள் “நஞ்சு” என்று பட்டென்று சொன்னார்.இது நான் தகவல் அறியும் உரிமையில் கேட்டேன்.அதற்கான பதில்தான் இது.அத்துடன் இங்கே எங்கள் நாடுகளில் மாதிரி பிழையான தகவல்களையும் தர மாட்டார்கள்.அதற்கான எந்தத்தேவையும் இல்லை.
ப்பானில் பிள்ளை பிறந்து தாயின் மார்பில் தாய்ப்பால் இல்லை என்றால் கிரேப்ஸால் உருவாக்கப்பட்ட ஒரு ஜுஸ்தான் கொடுப்பார்கள்(அதில் பன்றியின் கொழுப்பு கலந்திருப்பது வேறு கதை.அதை தாதிமார்களே எங்களிடம் கூறுவார்கள்).அத்துடன் ஜப்பானியப்பெண்கள் குழந்தைக்கு தாயப்பால் கொடுப்பதை அவ்வளவு விரும்புவதும் இல்லை.எனது சில நண்பவர்களின் குழந்தைக்கு மருத்துவ மனையிலேயே தாய்ப்பால் இல்லை என்று ஒரு கிழமைக்கும் மேலாக இந்த கிறேப்ஸ் ஜூஸைத்தான் குழந்தைக்குக்கொடுத்தார்கள்.
இவைகள் மத்த்தினால் உருவான முட்டாள்தனங்கள் இல்லை.அதிகார வர்க்கத்தினால்(இலுமினாட்டி அதிகார வர்க்கம்)உருவாக்கப்பட்ட அறிவியல் முட்டாள்தனங்கள்.
இலங்கையில் இவ்வாறு ஒரு குழந்தைக்கு தடுப்பூசி தடுக்கப்பட்ட போது போலிஸுடன் மருத்துவர் வீடு வந்துள்ளார்.அப்போது குறிப்பிட்ட குழந்தையின் தந்தை அவர்களிடம் இரு கேள்விகளைத்தொடுத்துள்ளார்.
“என் குழந்தைக்கு ஊசி போடுங்கள்.ஆனால் எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்றாராம்.
1.இந்த தடுப்பூசியின் உள்ளடக்கத்தை எனக்கு கூற வேண்டும்.இது எனது தகவல் அறியும் உரிமை என்றாராம்.
2.இந்த ஊசிகளை ஏற்ற பிறகு எந்த நோய்கள் வராது என்று கூறுகிறீர்களோ அவைகள் வந்தால் அதற்கு நீங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.அதற்கான ஒரு உங்களுடைய கையெழுத்திடப்பட்ட காகிதமும் வேண்டும் என்றாராம்.வந்தவர்கள் எந்தப்பதிலும் இல்லாமல் திரும்ப விட்டார்களாம்.
“குர்ஆன் பிறந்த குழந்தைக்கு 2வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க கட்டளை இடுகிறது.” என்று பின்னூட்டமிட்டிருக்கிறார் முஃபீரிஸ் மன்சூர்.
 

More articles

Latest article