நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் பொருப்புக்கு வந்த பின்னர் சங்கத்தை சேர்ந்த யாருக்கு கஷ்ட்டம் என்றாலும் உடனடியாக சென்று அவர்களுக்கு உதவி செய்வார். அப்படி சந்திரபோஸின் மனைவி கடும் வறுமையில் உள்ள செய்தியை கண்ட விஷால் உடனடியாக அவருக்கு உதவி செய்துள்ளார்.
ரஜினி படங்களின் அதிரடி பாடல்களைப் போலவே, தத்துவப்பாடல்களும் புகழ் பெற்றவை. “மனிதன்” படத்தில் வரும், “வானத்தை பார்த்தேன்.. பூமிய பார்த்தேன்.. மனுசனை இன்னும் பார்க்கலையே” என்று திரையில் பாடி ஆடும் ரஜினியைக் கண்டு மனம் உருகாதவர் இருக்க முடியாது. அந்த கின் பிரபல இசையமைப்பாளராக விளங்கியவர் சந்திரபோஸ். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரும் நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தவர்.
ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்திவந்தார். பிறகு 1977ம் ஆண்டு இயக்குநர் வி. சி. குகநாதனின் இயக்கத்தில் வெளியான மதுரகீதம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா என்ற பாடலை மறக்கவே முடியாது. .
இவர் இசையமைத்த “மச்சானைப் பார்த்தீங்களா’ படத்தில் இடம்பெற்ற “மாம்பூவே சிறு மைனாவே’ பாடல் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் “மனிதன்’, “ஊர்க்காவலன்’, “ராஜா சின்ன ரோஜா” சத்யராஜ் நடித்த”அண்ணா நகர் முதல் தெரு’, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், பாடலும் மறக்க முடியாத பாடல். “அதே போல,” வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்.. மனுசன இன்னும் பார்க்கலையே..” என்ற பாடலும் புகழ் பெற்றது.
ஒரு காலத்தில் ஏவி.எம். நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கினார்.
வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த “நான் பெத்த மகனே” திரைப்படத்துக்கு கடைசியாக இசையமைத்தார்.
பிறகு இசையமைக்கும் வாய்ப்பு அருகிப்போகவே டிவி சீரியல்களில் நடித்து வந்தார். “மலர்கள்’, “திருப்பாவை”, ஆகிய தொடர்கள் அவற்றில் சில
“கத்திக் கப்பல்’ உள்ளிட்ட சில படங்களிலிலும் நடித்தார்.
படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது “சூரன்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.
இதற்கிடையே உறவினர் தயாரித்த திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்தார். அந்த படம் தோல்வி அடைந்தது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு. அதோடு குடும்பத்தில் நிகழ்ந்த திருமண செலவும் இவரை பெரும் கடனாளி ஆக்கியது.
பொருளாதார சிக்கலில் இருந்தவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி சந்திரபோஸ் மறைந்தார்.
இவருக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.
இன்று சந்திரபோஸின் கு டும்பம் பத்துக்கு பத்து வீட்டில் மிக வறுமையில் வாடுகிறது. அவரது மனைவி ராஜகுமாரி, வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
“என் கணவர் சந்திரபோஸூக்கு எத்தனையோ திரைப் பிரமுகர்களை நன்கு தெரியும். அவர்களில் யாரேனும் உதவ வேண்டும்” என்று ராஜகுமாரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் பொருப்புக்கு வந்த பின்னர் சங்கத்தை சேர்ந்த யாருக்கு கஷ்ட்டம் என்றாலும் உடனடியாக சென்று அவர்களுக்கு உதவி செய்வார். இந்த செய்தியை பார்த்த விஷால் உடனடியாக அவருக்கு உதவி செய்துள்ளார்.
தனது தேவி அறக்கட்டளை மூலம் அவருக்கு குடும்ப நல உதவி தொகை வழங்கியுள்ளார் விஷால், உதவியை பெற்ற சந்திரபோஸின் மனைவி விஷாலுக்கு நன்றி தெரிவித்தார்.