ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ .
இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் மூன்றாவது பாடலாக வைல்ட் ஸ்ட்ராபெரி பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் துள்ளலான வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் தற்போது வெளியானது.