1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’.
இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் ஆகிறது.
இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம் சரவணனிடமிருந்து ஜே.எஸ்.பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பாக்யராஜ் இயக்குவது முடிவானது.
பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.