மும்பை:
மும்பை தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, அங்குள்ள காவலர் நினைவிடத்தில் மாநில கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி அன்று, உலகத்தை உலுக்கிய, பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தொடர் தாக்குதலில், ஏராளமான காவலர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதல் நடைபெற்ற 11வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தாக்குதலில் பலியானவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மும்பை தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவை முன்னிட்டு, மும்பையில் உள்ள காவலர் நினைவிடத்தில் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.