பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா அணியை வீழ்த்திய மும்பை அணி, இத்தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.
இரு அணிகள் மோதிய போட்டியின் 30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், மும்பை அணியின் பார்தலோமெவ் ஆக்பெச் முதல் கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.
பின்னர், 34வது நிமிடத்தில், மும்பை அணி மற்றொரு கோலடித்தாலும், அது ஃபவுல் கணக்கில் சேர்ந்தது. ஆனாலும், அசராத மும்பை அணி, 45வது நிமிடத்தில் ஒரு கோடித்தது. இதை அடித்தவர் ரோலின் போர்ஜஸ்.
இதனால், முதல் பாதி ஆட்டத்தின் முடிவில், மும்பை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர், ஒடிசா அணி பதிலடி கொடுக்க கடுமையாக போராடியது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில், ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது.