சென்னை:

மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல்  தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதியன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்ததோடு, கட்சியின் சின்னம், கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

 

கட்சி சின்னத்தில் இணைந்துள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், நட்சத்திரங்களின் முனைகள் மக்களையும் குறிக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

உடனடியாக, கமலின் கட்சி, கொடி சின்னத்தையும் காப்பி என்று பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் கேலியாக பதிவிட்டனர்.  மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து ம.நீ.ம. கட்சிக்கொடி காப்பி அடிக்கப்பட்டது என்று பதிவிட்டனர்.

இந்த நிலையில் மும்பை தமிழர் பாசறையினர் தங்கள்  சின்னத்தை ம.நீ.ம.வுக்கு விட்டுக்கொடுத்து விட்டனர் என்று  கமல் கூறியுள்ளார்.