மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் சாலை ரெயில் நிலையத்தில் மின் கசிவு என ஏற்பட்ட வதந்தி காரணமாக  கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியான பரிதாபம் நடந்தது.

அப்போது உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து நகைகளையும், மற்றும் பொருட்களையும் ஒரு கும்பல் திருடி சென்றுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே மும்பை கடும் மழையால் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை  காலை 10.30 மணியளவில் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மழையால் ஏராளமான மக்கள் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனை அறிந்த மக்கள் ரயில் நிலைய மேம்பாலத்தில் முண்டியடித்து கொண்டு சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 22 பேர் உயிரிழந்தனர். இதில், கொடுமை என்னவென்றால் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து நகைகளையும், மற்றும் பொருட்களையும் ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது.

மும்பை கஞ்சூர்மார்க்கில் வசிக்கும் ஷெட்டி அவரது நண்பரா சுஜாதா அலாவுடன் சேர்ந்து தாதரில் உள்ள மலர்கள்  சந்தைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது பெய்த மழை காரணமாக இருவரும்  எல்பின்ஸ்டன் சாலை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கினர்.

இவர்களை காணவில்லை என்று தேடியபோதுதான் அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது தெரிய வந்தது. அவர்கள் உடலை  கேஇஎம் மருத்துவமனையில் இருந்து பெற முயற்சித்தபோது, அவரது கைகளில் உள்ள தங்க வளையல் காணாமல் போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக புகார் கூறினார். மேலும், இந்த விபத்து குறித்த படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. அதில் ஒரு படத்தில், இறந்த பெண்ணின் கைகளில் இருந்து வளையலை கழற்றும் படமும் வெளியாகி இருந்தது. இரண்டு பேர் சேர்ந்த அந்த பெண்ணின் கையில் இருந்து வளையலை உருவி எடுப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடலில் இருந்து இதுபோன்ற நகைகளை கொள்ளையடித்த கும்பல் விரைவில் கைது செய்யப்படுவர் என்று மும்பை கமிஷனர் கூறி உள்ளார்.